Sunday, August 25, 2013

சுவிஸ் பேர்ண் ஞான லிங்கேஸ்வர ஆலய தேர்த்திருவிழா நேற்றைய தினம் இடம்பெற்றது!

ஐரோப்பிய கண்டத்தின் சுவிஸ் தலைநகரத்தில் 1994ம் ஆண்டு பஞ்ச பாண்டவர்கள் போன்று 5 இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட அருள்ஞானமிகு ஞனாலிங்கேஸ்வரர் ஆலயம் இன்று ஐரோப்பியாவிலேயே தமிழில் பூசை செய்யும் ஆலயமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.





இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 15.08.2013ம் திகதி சிறப்புற ஆரம்பித்தது.

தேர்த்திருவிழாவான நேற்றைய தினம் பல நூற்றுக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டதுடன் தண்ணீர்ப்பந்தல்கள், மணிக்கடைகள் என விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதேவேளை பலத்த மழை பெய்தபோதிலும் அதனையும் பொருட்படுத்தாது பக்தர்கள் அனைவரும் இறைவனின் அருள்வேண்டி கலந்துகொண்டனர்.

இதன்போது 208 மங்கையர்கள் ஒன்றிணைந்து அடாத மழையிலும் விடாது பரத நாட்டிய கோலாகலம் பூண்டது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

இத்தேர்த்திருவிழாவில் பல்லின மக்களும் கலந்துகொண்டதுடன் இறுதியில் மகேஸ்வர பூசையுடன் (அன்னதானம்) இனிதே நிறைவுற்றது.

படங்கள் கிளிக் http://www.kathiravanphotos.com/

No comments:

Post a Comment