Saturday, June 22, 2013

ஆயிரக்கணக்கா​ன பக்தர்கள் புடைசூழு தேர் ஏறி அருள்பாலித்தா​ர் பேர்ண் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணி​யர் (வீடியோ இணைப்பு)

ஐரோப்பா கண்டத்தில் அல்ப்ஸ் மலைத்தொடரின் மத்தியிலே சுவர்ண குபேர பூமியாகிய சுவிற்சர்லாந்து தேசத்தின் தலைநகரம் பேர்ண் மாநகரில் எழுந்தருளியுள்ள கலியுகவரதன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியரின் பிரம்மோற்சவத்தில் வைகாசித் திங்கள் 30ம் நாள் (12.06.2013) புதன் கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 25.06.2013 அன்று வைரவர் மடையுடன் நிறைவடைகின்றது.

 
இந்த ஆலயம் 1992ம் ஆண்டிலிருந்து பேர்ண் நகரப்பகுதியில் அமைந்து சுவிஸ் பேர்ண் மக்களுக்கு அருள்பாலித்து வந்ததுடன் தற்போது நகரத்திற்கு வெளியே சொந்த நிலத்தில் பிரம்மாண்டமான கட்டடத்தில் அமையவுள்ளதை உலக சைவ மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
 
இதேவேளை தற்போது இடம்பெறும் திருவிழாவானது பேர்ண் நகரத்தில் அமைந்துள்ள ஆலயத்தின் இறுதி திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த வருடம் புதிதாக அமையவுள்ள இந்த ஆலயத்தில் மகோற்சவ விஞ்ஞாபனம் சிறந்த முறையில் இடம்பெறும் என சுவிஸ் மக்கள் எதிர்பார்ப்பதுடன் ஆலய நிர்மாணப் பணிகள் தங்கு தடையின்றி செவ்வனே நிறைவேற வேண்டும் என்றும் கதிரவன் குழுமமும் பிரார்த்தனை செய்கின்றது.
 
 
 
இன்று 10ம் திருவிழாவாக தேர்த்திருவிழாவில் நாதஸ்வரங்கள், மேளங்கள் முழங்க பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த முருகப்பெருமான் அனைவருக்கும் அருள்பாலித்ததுடன், பக்தர்களும் தமது நேர்த்திக்கடன்களை காவடி, கற்பூர சட்டி, பாற்குடம் எடுத்தும் நிறைவேற்றியமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
 
   சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாணமுருகன் தேர்த் திருவிழா
        

சுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலயத்தில் ஆறாம் திருவிழாவில் இடம்பெற்ற பிரம்மாண்டமான மேளச் சமா
         

கோயில் ஆலய பரிபால சபை தலைவர் ஆறுமுகம் பரமேஸ்வரன் அவர்களின் செவ்வியும், மற்றும் ஆலய குருமார்களுடனான செவ்வி. 
 
  
              

No comments:

Post a Comment