எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்! இந்த ஆசை யாருக்குத்தான் இருக்காது?
அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள்.
இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா?
முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.
திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
புதன்கிழமை
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
Showing posts with label சிந்தனைகள். Show all posts

Sunday, January 20, 2013
Monday, December 31, 2012
கடவுளே அறிவின் வடிவம்!
* உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ, அது போலவே உயிருக்கு
அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு
மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே,
வலிமைகளில் எல்லாம்
உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும்
செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை
பெறுவான்.
* அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து
நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால்
உயர்ந்திருப்பவர்களைக் காட்டிலும், அறிவால் சிறந்தோரே
உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும்
அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது. இவர்கள்
யாருக்கும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.
* பரிபூரணமான அறிவைப் பெற்றிருப்பவர்கள், எப்போதும்
தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எந்த
இன்பத்திற்கும் அடிமையாகாமல், தம்மை அடக்கி
வைத்திருப்பார்கள். ஒரு பொருளை பார்த்தவுடன் அதன்
வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணிக்காமல், அதன்
உட்பொருள் தன்மையையும், உண்மை நிலையையும் எளிதில் கணித்து
விடுவார்கள்.
* மனிதர்கள் சிறந்து திகழ அறிவு தேவை. கடவுளே அறிவின்
வடிவமாக இருக்கிறார். அந்த அறிவாகிய இறைவன் உள்ளே
வருவதற்கு இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். இதயத்தை
சுத்தப்படுத்த இறைவனிடத்தில் பக்தி செலுத்த வேண்டும்.

Wednesday, August 29, 2012
தானமாக தவத்தையே அளித்த அன்னையின் உள்ளம்!
அகில உலகையும் காத்துவருபவர் ஆதிபராசக்தி. கருணையுள்ளம் கொண்ட கல்யாணி.உலகின் மக்களை பாசமுடன் காத்துவரும் பார்வதிதேவியின் புராணங்கள் வாயிலாக அறியபட்ட கதை இது. தாயாய் அனைவரையும் காத்திடும் ஜகதீஸ்வரியானவர் வலிமை பொருந்திய இமவானுக்கு அருமைமகளாகத் தோன்றினார். அப்போது சிவபெருமானைக் கணவனாக அடைய விரும்பி கடும்தவம் மேற்கொண்டார்.
அவரின் தவச்சிறப்பை மெச்சி சிவபிரானும் சக்தியின் எதிரே காட்சி அளித்து அவரை மனைவியாக ஏற்றுக்கொண்டார். திருவிளையாடல் புரிவது சிவனார்க்கு பொழுது போக்கு. ஆனாலும் சிவனின் திருவிளையாடல் உலகிற்கு உண்மையை உணர்த்தும் தத்துவம் அடங்கி இருக்கும். அவரின் ஆடல் மனைவி மக்கள் தேவர்கள் முனிவர்கள் அசுரர்கள் அடியவர்கள் அன்புபக்தர்கள் உலகின் உயிர்கள் அனைத்திலும் புரிந்திருப்பார். அப்படி ஆடல் அகிலலோக அன்னையிடமும் ஆடிப்பார்க்க நினைத்து மறைந்து விட்டார். பார்வதி தவச்சாலையில் இருந்து வெளியே வந்து கற்பாறையில் அமர்ந்திருந்தார்.
அப்போது எங்கிருந்தோ ஒரு சிறுவனின் அழுகைக் குரல் கேட்டது. சிறுவனின் அவலக்குரலைக் கேட்டு தாயுள்ளம் தவித்தது. பராசக்தி சிறுவனின் கதறலைக் கேட்டு சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்து சென்றாள். அங்கு கண்டகாட்சிதான் என்ன, முதலை ஒன்று சிறுவனை விழுங்குவதற்காக அவன் காலைக்கவ்விப் பிடித்துக் கொண்டு ஆற்றுக்கு உள்ளே இழுத்துக் கொண்டு சென்று
கொண்டிருந்தது. அந்தசிறுவனின் அழுகுரல் மிகபரிதாபமாக இருந்தது. அவன் வீட்டுக்கு மூத்தபிள்ளை என்றும் அதிலும் ஒரேபிள்ளையான என்னை விழுங்கிவிட்டால் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேறும் யாரும் இல்லை என்றும் இந்த முதலையிடமிருந்து என்னைக் காப்பாற்ற யாரும் இல்லையா, என்ற அவனின் அலறல் சத்தம் கேட்டதும் சக்திதேவி விரைந்து வந்து முதலையைப் பார்த்து கூவிஅழைத்தார். "முதலையரசே, பாவம் ஒன்றும் அறியாத இந்தக் குழந்தையை தயவு செய்து விட்டு விடுங்கள்" என்று கேட்டுக்கொண்டாள். ஆனால் முதலையொ சிறுவனை விட்டுவிடுவதாக இல்லை. "ஒரு நாளில் இந்த நேரத்தில் எது என் அருகில் வருகிறதோ அதையே உணவாகக் கொள்வது வழக்கம். அதன்படி இன்று இந்தச்சிறுவன் தான் எனக்கு இரையாகப் போகிறான். பிரம்மாவே இவனை இங்கு அனுப்பியிருக்கிறார். ஆகவே இவனை விட்டுவிடுவதற்கில்லை. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்" என முதலை கூறியது.
இப்பதிலை சற்றும் எதிர்பார்க்காத தேவி சிறிது கலங்கினாலும் பின்பு தெளிவு பெற்று "முதலையே நான் தங்களை வணங்கிக்கேட்டுக் கொள்கிறேன். இமயம் சென்று கடும் தவம் செய்திருக்கிறேன், அத்தவத்திற்காக அதன் வலிமைக்காக இந்தச்சிறுவனை விட்டு விடும்படி தங்களை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பார்வதி தேவி கெஞ்சிக் கூறினாள். அதைக்கேட்ட முதலை "தேவி நீங்கள் இதுவரை செய்த கடுமையான தவங்களின் பலன் முழுவதையும் அப்படியே எனக்கு கொடுப்பீரானால் நான் இந்தச்சிறுவனை இக்கணமே விட்டுவிடுகிறேன்" என்று தெரிவித்தது.
முதலையின் வேண்டுகோளைக் கேட்ட தேவிக்கு மிகுந்த உற்சாகம் பெருகியது. "முதலையரசே இந்தத் தவப்பயன் மட்டுமென்ன இத்தனை பிறவிகளிலும் சேர்த்து வைத்த புண்ணியச்செயல்களின் பலன் முழுவதையுமே அப்படியே தங்களுக்கு தந்து விடுகிறேன். நீங்கள் குழந்தையை ஒன்றும் செய்யாது அனுப்பிவையுங்கள்" எனப்பிரார்த்தித்த மறுகணமே தவப்பயன் முதலையை அடைந்து விட முதலையின் உடல் பளபள என பொன்போல் மிளிரத்தொடங்கியது.
கண்களைகூசச் செய்யும் ஒளியைப்பெற்ற முதலை, "தேவி அவசரப்பட்டு என்னகாரியம் செய்து விட்டீர்கள். சற்றுச் சிந்தித்திருக்கக்கூடாதா, தவத்தை எவ்வளவு கஸ்டப்பட்டு இயற்றியிருப்பீர்கள், எந்த இலட்சியம் அடைய கடும்தவம் இயற்றியிருப்பீர்கள் அப்படிப் பட்ட அளப்பரிய மகத்தான தவத்தை எனக்கு அளித்துவிடுவது. தங்களுக்கு நல்லதல்ல. எனினும் தாங்கள், இந்த ஏழை அந்தணச்சிறுவனிடம் காட்டிய இரக்கத்தையும் திக்கற்ற எளியவர்களிடம் தாங்கள் கொண்டுள்ள இரக்கசிந்தையையும் கண்டு களிப்படைகிறேன்.
தாங்கள் எனக்கு அளித்த தவத்தையும் சிறுவனின் உயிரையும் திரும்பவும் நான் வரமாக உங்களுக்கே அளித்து விடுகிறேன், எடுத்துக்கொள்ளுங்கள்" என்று முதலை தேவியிடம் தெரிவித்தது.
தேவியும் முதலையைப்பார்த்து கூறினார், "முதலை அரசே என் உயிரைக் கொடுத்தாவது சிறுவனைக்காப்பாற்ற வேண்டியது என் தலையாய கடமை தவத்தின் பலன் போய்விட்டால் மறுபடியும் தவம் செய்து கொள்ளலாம். ஆனால் சிறுவன் இறந்து விட்டால் மீண்டும் அவன் உயிரைத்திரும்பப் பெறமுடியுமா ஆகவே சிந்தித்து இந்த முடிவுக்கு வந்தேன். எந்த உயிரும் எனக்கு முக்கியம் அழிந்துபோக விட மாட்டேன். அதோடு ஒரு முறை பிறருக்கு அளித்த பொருளை திரும்பப் பெறும் வழக்கம் எனக்கு இல்லை ஆகையால் தயைகூர்ந்து என் தவபலன்களை ஏற்றுக் கொண்டு சிறுவனை விட்டுவிடுங்கள்." இப்படி தேவியின் வேண்டுகோளை ஏற்றமுதலை சிறுவனை விட்டுவிட்டுத் திடீரென்று மறைந்து விட்டது. தேவியும் சிறுவனை அன்போடு அணைத்து வீட்டிற்கு வழி அனுப்பி
வைத்தார்.
பின்னர் தவபலன்கள் யாவும் போய்விட்டதால் மீண்டும் தவம் செய்ய அம்பிகை உட்கார்ந்து விட்டாள். அந்நேரம் சிவன் தோன்றி "தேவி இனியும் நீ தவம் இயற்ற வேண்டியது இல்லை. உன் தவப்பயன் முழுவதையும் எனக்கே கொடுத்து விட்டாய். முதலையாக சிறுவனாக வந்தது நானேதான் உன் பெருமயையும் இரக்க குணத்தையும் சோதிக்கவே இவ்விளையாடல் புரிந்தேன். தானம் செய்வது என்பது புண்ணியம் அதிலும் தவம் செய்து அதை தானமாக வழங்குவது என்பது அதைவிட மிக உயர்ந்தது. இப்படி புண்ணியம் செய்ததவப்பலன் தானமாக வழங்கும் போது அது பல்கிப் பெருகி பல ஆயிரம் மடங்காக உனக்கே பெருகியிருக்கின்றன. அவை எந்நாளும் குறையமாட்டா," என்று கூறி அகில லோக மாதாவுடன் சிவனார் கயிலைமலைக்கு சென்றார்.
'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. என்று அன்புடமை' அதிகாரத்தில் கூறும் வள்ளுவர், அன்பு இல்லாதவர் எல்லாப்பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர், அன்பு உடையவர் தம் உடம்பையும்
பிறருக்கு உரிமையாக்கி வாழ்வர். ஆகவே ஜபம் தியானம் போன்ற ஆத்மசாதனங்களைப் பழகும் சாதகன் அவற்றைச் செய்து முடித்தான பிறகு முடிவில் அவற்றின் பலன்களையும் இறைவனின் திருவடிகளில் அர்ப்பணித்து விட வேண்டும். பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி வைத்தால் பகவான் பக்தனை நோக்கி பத்து அடி வருகிறார். இதை உலகிற்கு உணர்த்த ஆடும் ஆனந்த நடராஜனுக்கு அன்னை சிவகாமியும் ஆடிக் களித்தார்.

Monday, July 30, 2012
எளிதில் இறைவனை நெருங்குவது எப்படி?
* ""நீங்கள் கீதை வாசிப்பதை விட கால்பந்து விளையாடுவதன் மூலம் இறைவனை எளிதாக நெருங்க முடியும்,'' என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார் சுவாமி விவேகானந்தர். கீதையை கடைபிடிக்க வேண்டுமானால், இளைஞர்கள் உடல் வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கடோபநிஷதம் என்ற நூலில், "பலமில்லாதவன் ஆன்ம சாட்சாத்காரம் பெற முடியாது' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
* ஜான் கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது, ஆரம்பப்பள்ளி சிறுவர்கள் அனைவரும் பாடங்கள் தொடங்கும் முன் ஒரு கி.மீ., தூரமாவது ஓட வேண்டும், அதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என ஆணையிட்டார்.
* தேசத்தலைவர் பாலகங்காதர திலகர் கணிதத்தில் எம்.ஏ., மற்றும் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர். அவர் கல்லூரியில் பயின்ற காலத்தில் நோஞ்சானாக இருந்ததால், படிப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு, ஓராண்டு காலம் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்தார். அவ்வாறு செய்ததே பிற்காலத்தில் பல இடங்களில் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கு நடந்த கொடுமைகளைத் தாங்க தனக்கு பேருதவியாக இருந்தது என்கிறார்.
* ஆரியசமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ணரின் சமகாலத்தவர். இவர்தன் மாணவர்களுக்கு வேதம் கற்றுக்கொடுப்பார். அத்துடன் மற்போரும் (பாக்சிங்) பயிற்சி அளிப்பார்.
* கட்டான தசைகளும் பலமான நரம்புகளும் இருந்தால் தான் மனதில் எழும் தீய ஆசைகளை கட்டுக்குள் வைக்கும். கோபம், பொறாமை, காமம் ஆகிய கீழான ஆசைகளில் இருந்து மாணவர்கள் விலகியிருக்க வேண்டும். உடல் வலுவைப் பெருக்கிக் கொண்டால் இது சாத்தியமே.
* விவேகானந்தர் ஒருமுறை இமயமலையிலுள்ள மாயாவதி ஆஸ்ரமம் முன்பு குதிரைச்சவாரி செய்து கொண்டிருந்தார். அவரது சீடர்களான ஞான், காளி கிருஷ்ணர் ஆகியோர் அவருக்காகக் காத்திருந்தனர். அவர்களைக் கவனிக்காதது போல் கடந்து சென்று விடுவதென நினைத்த சுவாமிஜி, வேகமாக அவர்கள் இருக்கும் இடத்தைக் கடக்க முயன்றார். ஆனால், ஞான் பாய்ந்து வந்து குதிரையின் லகானை இழுத்து நிறுத்திவிட்டார். குதிரையில் இருந்து இறங்கிய சுவாமிஜி, ""சபாஷ்! வேகமாகச் சென்ற குதிரையை நிறுத்திவிட்டாயே!'' எனப் புகழ்ந்தார்.
* மேற்கத்திய விளையாட்டுகளில், விவேகானந்த ருக்கு கால்பந்து மிகவும் பிடிக்கும். அது விளையாடுபவரின் தசைகளைக் கட்டமைக்கும். தைரியத்தை வளர்க்கும்.
* தன் உடலை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க உடற்பயிற்சி உதவும். ஒரு உடற்பயிற்சி கலைஞன் எந்த விளையாட்டிலும் தேர்ச்சி பெற்று திகழ்வான்.
* சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு மற்போர் வீரர் பயிற்சி செய்து கொண்டிருப்பதை விவேகானந்தர் பார்த்தார். அவரிடம் சென்று, தன்னுடன் பயிற்சிப்போருக்கு வரும்படி கேட்டார். அந்த நபரும் சம்மதிக்கவே இருவரும் மோதினர். அந்த நபர் தோற்றார். சுவாமியிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதற்கு காரணம் சுவாமி தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டதால் தான்!

Saturday, July 28, 2012
மனச்சாட்சியே தெய்வம்!
* மனிதன் தன்னைக் கடவுளின் குழந்தையாக நினைத்துக் கொண்டால், வாழ்வில் தொல்லைகள் மறைவதுடன், நன்மையும் ஏற்படும்.
* மனதில் இறைவனை நினைத்து அறிவு விளக்கேற்றி வைத்திருப்பவர்களின் மனதில் அற்பமான எண்ணங்கள் புகுவதில்லை.
* குழந்தையிடம் குற்றம் காணாமல் குணத்தைக் காண்பவள் தாய். அந்தத் தாயின் உள்ளத்தை அறிபவன், கடவுளின் கருணையை அறிபவனாகிறான்.
* நல்ல மனதுக்கு நல்லதாகவும், கெட்ட மனதுக்கு கெட்டதாகவும், தெய்வீக மனதுக்குத் தெய்வக் காட்சியாகவும் இந்த உலகம் தென்படுகிறது.
* மனித உள்ளத்தில் தெய்வம் மனசாட்சியாய் உள்ளது. அதைச் சுட்டிக்காட்டவோ, உதாசீனப்படுத்தவோ நம்மால் முடியாது.
* வாழ்வில் கடந்த பகுதி கனவாகப் போய் விட்டது. எஞ்சியிருக்கும் நாட்களும் கனவாகவே போய் விடும். இந்த உண்மையை உணர்ந்து, இறைவனிடம் உலக வாழ்வு நிலையானது என்று நினைக்கும் அறியாமையை அகற்ற பிரார்த்திப்போம்.
- தாயுமானவர்

Thursday, July 26, 2012
வாய்மையைப் பின்பற்றுங்கள்!
* அடக்கப்படாத மனமும், தீயநெறியில் செல்லும் குணமும் நம்மை எப்போதும் கீழ்நோக்கியே இழுக்கும். ஆனால், அடங்கிய மனம் நமக்கு விடுதலை அளிக்கும்.
* உலக நன்மைக்காக உங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராய் இருங்கள்.
* கள்ளம் கபடம் இல்லாத ஒழுக்கமுள்ள நாத்திகன், வஞ்சகனைக் காட்டிலும் சிறந்தவன்.
* இதயம் பரந்து விரிந்திருந்தால் மட்டுமே ஒருவனிடம் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானத்தால் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் வந்துவிடும்.
* மனத்தூய்மை உடையவனே கடவுளுக்கு மிக நெருங்கியவன்.
* யாருடைய மனம் ஏழை மக்களுக்காகத் துன்பத்தில் வருந்துமோ, அவரே மகாத்மா.
* இந்த மண்ணில் பிறப்பு எடுத்திருக்கும் நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதாவது ஒரு நல்ல பதிவை விட்டுச்செல்லுங்கள்.
* உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதையே பின்பற்றிச் செல்லுங்கள். கபடதாரியாகவோ, கோழையாகவோ இருப்பதால் பயனில்லை.
- விவேகானந்தர்

Tuesday, July 24, 2012
சரியான பாதையில் செல்வோம்!
* சுயகட்டுப்பாடு, ஒருமுகப்படுத்தும் திறன், அர்ப்பணிப்பு உணர்வு இவை மூன்றும் இருந்தால் தான் எந்தப் பணியிலும் சிறந்து விளங்க முடியும்.
* பிறருக்கு அன்பை வழங்க முயலுங்கள். வாழ்வை சீர்படுத்திக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிலும் வளமான சிந்தனைகளைப் பரப்புங்கள்.
* நம்மிடம் கண்ணாமூச்சி விளையாடும் கடவுளை அன்பின் மூலமாக நம்மால் அடைய முடியும்.
* நேர்மையற்ற மனிதர்களை சமூகத்தில் மலிந்திருக்கும் கொள்ளைநோய்களுக்கு ஒப்பிடலாம். இவர்களின் கீழான நடத்தையால் மக்கள் துன்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
* எப்போதும் சுழல்வது தான் சக்கரத்தின் இயல்பு. அதுபோல வாழ்க்கைச் சக்கரத்தையும் சரியான பாதையில் திருப்பி விடத்தான் வேண்டும்.
* மந்திரம் என்பது கடவுளை நினைக்க துணை செய்கிறது. அதைச் சொல்லும் போது அதற்குரிய தெய்வத்தின் உருவத்தை மனதில் நினைப்பது அவசியம்.
- சின்மயானந்தர்

Subscribe to:
Posts (Atom)