Saturday, January 25, 2014

வழமைக்கு மாறாக அமைந்திருக்கும் சிவலிங்கம்

திருக்கோவில்களில் சாதாரணமாக சிவலிங்கம் கிழக்கு நோக்கியே காட்சி தரும்.
ஆனால், மயிலாபூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கம் வழக்கத்திற்கு மாறாக மேற்கு பார்த்தபடி காட்சி தருகிறது.

Monday, January 13, 2014

பொங்குவதற்கு உகந்த நேரம்

பொங்கல் பண்டிகை. உத்தராயணப் புண்ய கால தொடக்கம்.
பொங்கலிட உகந்த நேரம் காலை மணி 7.50 முதல் 8.50க்குள் அல்லது 10.30 முதல் 11.00 மணி வரை.

பொங்கல் தினத்தில் கடைப்பிடிக்கப்படும் சடங்குகள்

பொங்கல் என்பது தென் இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு புகழ் பெற்ற அறுவடை திருவிழாவாகும். வளர்ந்து வளரும் நவீன உலகத்தில் கலாச்சாரமும் சடங்குகளும் மாறி கொண்டிருந்தாலும் கூட இந்த திருவிழா மீது இருக்கும் ஆர்வம் அப்படியே தான் உள்ளது.
இது அறுவடை திருவிழா என்பதால், புது பயிர்களை அறுவடை செய்து, சமைத்து கடவுளுக்கு முதலில் படைக்கப்படும். இத்திருவிழா தொடர்ந்து நாலு நாட்களுக்கு கொண்டாடப்படும். பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஒரு தனித்துவமான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை கொண்டுள்ளது. பண்டிகையின் முதல் நாள் போகி பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. அதிகமாக அறுவடை செய்ய, இந்நாளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்திர பகவானை வணங்குவார்கள்.

பண்டிகையின் இரண்டாவது நாளை சூர்ய பொங்கல் என்று அழைப்பார்கள். அறுவடை சிறப்பாக நடந்திட உதவிடும் சூரியனை இந்நாளில் வணங்குவார்கள். பண்டிகையின் மூன்றாவது நாளை மாட்டுப் பொங்கல் என்று அழைப்பார்கள். இந்நாளில், மாடு மேய்ப்பவர்கள், தங்களின் மாடுகள் மற்றும் காளைகளுக்கு நன்றியை செலுத்துவார்கள். பண்டிகையின் நான்காம் நாளை காணும் பொங்கல் என்று அழைப்பார்கள்.

கடைசி நாளில் தான் சொந்த பந்தங்களை பார்க்க அவர்கள் வீட்டிற்கு செல்வார்கள். இந்தியாவில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இத்திருவிழக்களின் வலிமையை காத்திட பழங்காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் இன்றளவும் கூட கடைப்பிடிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதனால் பொங்கல் பண்டிகையில் பின்பற்றப்படும் சடங்குகளை இப்போது பார்க்கலாமா?

சூர்ய பூஜை 


பொங்கல் பண்டிகையில் வழிபடப்படும் முக்கிய கடவுள் சூரிய பகவான். அதனால் சூரிய பகவானை வழிப்படுவதை சுற்றி தான் அனைத்து சடங்குகளும் நடைபெறும். பொங்கலன்று வீட்டிற்கு வெளியே இப்பூஜை நடைபெறும்.

பொங்கல் கோலம் போடுவது 


பூஜைக்காக தேர்ந்தெடுக்கப்படும் இடத்தை நன்றாக சுத்தம் செய்த பின்னர், அங்கே சூரிய கோலம் போடப்படும். வெள்ளை கோல மாவை கொண்டு ரங்கோலி வகை போல் போடப்படுவது தான் கோலம் என்பதை நாம் அனைவருமே அறிவோம். சூரிய பகவானின் முகமும் கோலத்துடன் சேர்ந்து வரையப்படும். மயில், கரும்பு, பொங்கும் பொங்கல் மற்றும் வளமையை குறிக்கும் படங்களையும் கோலமாக போடுவார்கள்.

உணவு 


பொங்கல் பூஜையில் உணவுகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்நநாளில், வீட்டிற்கு வெளியே சர்க்கரைப் பொங்கல் விசேஷமாக செய்யப்படும். மூன்று கரும்புகள் ஒன்றாக கட்டப்பட்டு செங்குத்தாக நிறுத்தப்படும். மஞ்சள் செடி கட்டப்பட்ட பானையில் சர்க்கரைப் பொங்கல் சமைக்கப்படும்.

வழிபாடு (இறை வணக்கம்) 


பொதுவாக பொங்கல் கொண்டாடும் போது சூர்ய அஷ்டோடரம் அல்லது காயத்ரி மந்திரம் ஓதப்படும்.

பூஜைகளுக்கு பின் 

போச்சி முடிந்தபின், புனித நீரும், பூக்களும் கோலத்தின் மீதும் சர்க்கரைப் பொங்கலின் மீதும் தெளிக்கப்படும். கடைசி வழிபாடு முடிந்த பின் அனைவருக்கும் உணவு பரிமாறப்படும்.

சூரிய பிரதிபலிப்பு 


தென் இந்தியாவின் சில பகுதிகளில், தண்ணீர் நிரப்பியுள்ள ஒரு பாத்திரத்தில் விழும் சூரியனின் பிம்பத்தை பார்க்கும் சடங்கு ஒன்று உள்ளது. சில சமுதாயனத்தினர் அந்த நீரில் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து, அந்த நீரில் சூரிய பிம்பத்தை பார்ப்பார்கள். கை விரல்களின் இடைவெளி வழியாக சூரியனை பார்ப்பது மற்றொரு தனித்துவமான சடங்காக கடைப்பிடிக்கப்படுகிறது.

Sunday, January 12, 2014

ஏகாதசி விரதத்தின் மகத்துவம்

இப்போது ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி காண்போம்? இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத சுக்லபட்ச (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.
பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார்.

முக்கோடிதேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது . திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலைகடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது.

இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார். இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும் . மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம். ஒருவருடம் முழுவதும் ஏகாதசிவிரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, அம்பரீஷ மஹாராஜாவை திருமாலின் சுதர்சன சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.

திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.

ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்தவிரதத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்றபெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது. பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்தவிரதத்தை செய்யமுடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தைமட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.

பாற்கடலில் மந்தாரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும்கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்தநாள்தான் என்பது குறிப்பிடத்தக்கது .

Sunday, January 5, 2014

வைகுண்ட ஏகாதசி தினத்தில் இறந்தால் முக்தி கிடைக்குமா?

வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது.
ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.