Sunday, August 25, 2013

சுவிஸ் பேர்ண் ஞான லிங்கேஸ்வர ஆலய தேர்த்திருவிழா நேற்றைய தினம் இடம்பெற்றது!

ஐரோப்பிய கண்டத்தின் சுவிஸ் தலைநகரத்தில் 1994ம் ஆண்டு பஞ்ச பாண்டவர்கள் போன்று 5 இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட அருள்ஞானமிகு ஞனாலிங்கேஸ்வரர் ஆலயம் இன்று ஐரோப்பியாவிலேயே தமிழில் பூசை செய்யும் ஆலயமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.





இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 15.08.2013ம் திகதி சிறப்புற ஆரம்பித்தது.

தேர்த்திருவிழாவான நேற்றைய தினம் பல நூற்றுக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டதுடன் தண்ணீர்ப்பந்தல்கள், மணிக்கடைகள் என விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதேவேளை பலத்த மழை பெய்தபோதிலும் அதனையும் பொருட்படுத்தாது பக்தர்கள் அனைவரும் இறைவனின் அருள்வேண்டி கலந்துகொண்டனர்.

இதன்போது 208 மங்கையர்கள் ஒன்றிணைந்து அடாத மழையிலும் விடாது பரத நாட்டிய கோலாகலம் பூண்டது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

இத்தேர்த்திருவிழாவில் பல்லின மக்களும் கலந்துகொண்டதுடன் இறுதியில் மகேஸ்வர பூசையுடன் (அன்னதானம்) இனிதே நிறைவுற்றது.

படங்கள் கிளிக் http://www.kathiravanphotos.com/

Friday, August 23, 2013

காசியில் அப்படி என்னதான் இருக்கு?

வயசானதுக்கு அப்பறம் ஏன் எல்லாம் காசிக்கு போகனும்னு நினைக்கிறாங்க?...காசியில் அப்படி என்னதான் இருக்கு?!......

வாரணாசி - காசி நகரத்தின் உண்மையான முகம்!

பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி,தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும்.


படைப்பு மற்றும் அழிவுக் கடவுளாக இந்துக்களால் போற்றப்படும் சிவபெருமானின் நகரமாக அறியப்படும் இது அனைத்து இந்து நகரங்களுள் புனிதமாகக் கருதப்படும் மிகச் சில நகரங்களுள் முக்கியமானது.

இங்கு ஒருவர் இயற்கை எய்தினாலோ அல்லது அவரது இறுதிச்சடங்கு இங்கு நிறைவேற்றப்பட்டாலோ அவர் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து சாஸ்வதமாக விடுபட்டு, மோக்ஷத்தை அடைவார் என்று பெரிதும் நம்பப்படுகிறது. அதனால் இது, விடுதலை அளிக்கக்கூடிய இடம் என்ற அர்த்தம் தொனிக்குமாறு முக்தி ஸ்தலா என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும், கங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விமோசனம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

யாத்ரீகர்கள் பலர் சூரியோதயத்தின் போதும் சூரிய அஸ்தமனத்தின் போதும் இந்நதியில் புனித நீராடும் காட்சியானது, இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை வசியப்படுத்துவதாக உள்ளது. வாரணாசியின் முக்கிய படித்துறையில், ஒவ்வொரு மாலை வேளையும் ஆராதனை செய்யப்படுகிறது.

குளியல், ஆராதனைகள் மற்றும் பிணவெரிப்பு இத்யாதிகள் நிகழ்த்தப்பெறும் படித்துறைகளின் பக்கவாட்டுப் பகுதிகளில் செய்யப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள், இந்த சூட்சுமமான நகரின் மிக முக்கிய வசீகரமாகத் திகழ்கிறது. இவை தவிர, யோகா, மசாஜ்கள், சவரம்; ஏன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் கூட நதியோரங்களில் நடந்தேறுவதைக் காணலாம்.

வாரணாசி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


வாரணாசி உங்களுக்கு தெய்வீகத்தோடு உறவாடும் ஒரு நிகரற்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்நகரின் தனிச்சிறப்பு யாதெனின், அது கங்கை நதிக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள் போல் அமைந்துள்ள படித்துறைகளே ஆகும்.

இங்கு காணப்படும் சில முக்கிய படித்துறைகளுள் ஒன்றான தசாஸ்வமேத் படித்துறையில் தான் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

தர்பங்கா படித்துறை, ஹனுமான் படித்துறை மற்றும் மன்மந்திர் படித்துறை ஆகியன இங்குள்ள மற்றும் சில படித்துறைகளாகும். உலகிலேயே வாரணாசியில் மட்டும் தான் இறப்பு சுற்றுலா வழங்கப்படுகிறது.

பிணங்கள் எரிக்கப்பட்டு பின் அஸ்தியை கங்கை நீரில் கரைக்கும் முழுநீளக்காட்சியைக் காணக்கூடிய மணிகர்னிகா படித்துறையையும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முற்றுகையிடுகின்றனர்.

அஸ்ஸி படித்துறையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மற்றும் சில படித்துறைகள், துளசி படித்துறை, ஹரிஷ்சந்திரா படித்துறை, ஷிவாலா படித்துறை மற்றும் புகைப்படம் எடுக்கத்தக்க அழகிய காட்சிகளைக் கொண்ட கேதார் படித்துறை ஆகியனவாகும்.

வாரணாசி சிவபெருமானின் உறைவிடமாகக் கருதப்படுவதனால் இங்கு காஷி விஷ்வநாத் கோயில், புதிய விஷ்வநாத் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

துளசி மானஸ் கோயில் மற்றும் துர்க்கை கோயில் ஆகியன இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பிற கோயில்களாகும். முஸ்லிம்கள் அலாம்கீர் மசூதி மூலமாக இங்கு தங்கள் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டியுள்ளனர். ஜைனர்கள் இங்குள்ள ஜைனக் கோயிலில் மன ஆறுதல் பெறுகின்றனர்.

வழிபாட்டுத் தலங்கள் தவிர்த்து, ஆற்றின் மறு கரையில் ராம்நகர் கோட்டை மற்றும் ஜந்தர் மந்தர் என்றழைக்கப்படும் ஒரு ஆய்வகம் ஆகியவற்றையும் வாரணாசியில் காணலாம்.

மிக அமைதியான ஒரு வளாகத்தில் பரந்து விரிந்து காணப்படும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இருப்பிடமாகவும் இந்நகரம் விளங்குகிறது.

இப்பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் கிழக்கின் ஆக்ஸ்ஃபோர்டு என்று அறியப்பட்ட பெருமை வாய்ந்ததாகும். இந்நகரம் பாரம்பரிய நடனம், இசை மற்றும் யோகா ஆகியவற்றிற்கான பிரபலமான மையமாகவும் போற்றப்படுகிறது.

வாரணாசிக்கு செல்வது எப்படி?


சாலை, இரயில் மற்றும் வான் வழி போக்குவரத்து சேவைகள் மூலம் வாரணாசியை எளிதாக அடையலாம். இது தனக்கென ஒரு சர்வதேச விமான நிலையத்தைப் பெற்றுள்ள பெருமை வாய்ந்தது.

வாரணாசி செல்வதற்கு ஏற்ற காலகட்டம்


அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே வாரணாசி செல்வதற்கு ஏற்ற காலகட்டம் ஆகும்.

Wednesday, August 14, 2013

சீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு ! (வீடியோ இணைப்பு)

சீரடி சாயி பாபா, 20 ஆம்  நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர்.   இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர்.

 
தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’ என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான சீரிடிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துறவியாகவே வாழ்ந்து மறைந்த புனித சீரடி சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகளை விரிவாகக் காண்போம்.
 
பிறப்பு: செப்டம்பர் 28, 1838

இடம்: சீரடி, அகமது நகர் மாவட்டம், மகாராஸ்டிரா மாநிலம், இந்தியா

பணி: இந்திய குரு

இறப்பு: செப்டம்பர் 20, 1928

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு பற்றிய தகவல்
 

சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
 

ஒரு மகானாக சீரடி சாயி பாபா
 

அவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.
 
இறப்பு
 
இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். இன்று அவர் இல்லாவிட்டாலும், சீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர் புனிதமாக வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

 

Monday, August 12, 2013

ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் வழக்கம், இது ஏன் தெரியுமா? தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார் சுன்னினி, மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு


துக்கம் தாங்க முடியாமல் ஜமத்கனி முனவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.

அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார். ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக் கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.

அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகாதேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாராமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் உற்றுவார்கள் இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், ஊழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் - இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணையில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிட வேண்டும். அதற் பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும்.

Friday, August 9, 2013

கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்மந்தம்?

பிரபஞ்சம் என்றால் என்ன?

பால்வெளி, சூரியன், கிரகங்கள், பூமி, புல், பூண்டு, மனிதன், விலங்கு, தூசு என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இதோடு நிற்காமல் பிரபஞ்சம் என்பதை முகக்கால

 
மும் சேர்ந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றை அடக்கியது தான் பிரபஞ்சம். சுருக்கமாக காலம் தான் பிரபஞ்சம் எனலாம். பேரரிஞர் ஐன்ஸ்டீன் கூட பிரபஞ்சத்தை ஒரு கால வெளியாகவே குறிப்பிடுகிறார். இது குறித்த விரிவான விளக்கங்களை அடுத்த பதிப்பில் எளிமையாகவே சொல்கிறோம்.( இங்கு சொன்னால் பதிப்பு பக்கம் நீண்டுவிடும். மற்ற கேள்விகளை பார்க்க முடியாது)
ஆன்மீகம் என்றால் என்ன?



காலத்தை ஆளுகை செய்யும் அறிவு தான் ஆன்மீகம். அது தான் கடவுளும். இது உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்காது. இதை கதையாகவோ உதாரணங்களாகவோ சொன்னால் யாருக்கும் புரியாது. ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அதனால் அறிவியல் ரீதியான நிரூபணங்களுடன் அடுத்தடுத்த பதிப்பில் விளக்கி சொல்கிறேன். முதலில் அறிவியலையும் பிரபஞ்சத்தையும் தெளிவாக புரிந்து கொள்வோம். அப்போது தான் ஆன்மீகத்தை எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.
அறிவியல் என்பது என்ன?


அறிவியல் என்பது ஒரு பொருளை(கருவியை) மையமாக வைத்து பிரபஞ்சத்தை ஆய்வது. ஆனால் பிரபஞ்சம் எனபது பொருள் மட்டும் சார்ந்தது அல்ல. பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்றும் இருக்கிறது. இதை விஞ்ஞானிகள் தெளிவாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக ஐன்ஸ்டீனுக்கு முன்பு விண்வெளியை வெற்றிடமாகவே விஞ்ஞானிகள் கருதி வந்தார்கள். அதனால் விண்வெளியில் இருந்து வரும் ஒளியை கடத்த ஈதர் என்ற கற்பனை துகளை பயன்படுத்தினார்கள். பின்னர் அது மின்காந்த அலைகள் என பெயர் மாற்றபட்டு விட்டது.
உண்மையில் இரண்டு பொருட்களுக்கு இடைபட்ட வெளியில் என்ன இருக்கிறது என்பது இன்றுவரை விஞ்ஞானிகளுக்கு கேள்விகுறி தான். இந்த இடத்தில் தான் ஆன்மீகம் தேவைப்படுகிறது. ஆன்மீகத்தை அறிவியலோடு பொருத்தும் போது எல்லமே பொய்யாகிவிடுகிறது. அதாவது இதுவரை விஞ்ஞானிகள் கணித்து வைத்துள்ள எல்லாமே பொய்யாகிறது. இங்கு நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வானியால் விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்துள்ளது எல்லாம் கணிப்புகளே அல்லாமல் முழுமையான நிரூபணங்கள் அல்ல. மறுப்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணிப்புகள் இவை.
பல கணிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒரு விஞ்ஞானியின் கருத்தை இன்னொரு விஞ்ஞானி ஏற்றுக்கொள்வதில்லை. இதெல்லாம் பெரிது படுத்தபபடாமையால் யாருக்கும் அறிவியல் மீது சந்தேகம் வருவதில்லை.
சுருக்கமாக அறிவியல் என்பது பொருள் சார்ந்தது. பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்கிறது என்பதை அறிவியலாளர்கள் மறுப்பதில்லை. பொருளுக்கு அப்பாற்பட்டதை அறிவியலால் மட்டுமே விளக்க முடியாது.
மதத்துக்கும் ஆன்மீகத்துக்கம் உள்ள சம்மந்தம் என்ன?



முழுமையான ஆன்மீகம் என்பது ஒரு சூன்யம். அது மனிதகுல வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. இதை தெளிவாக புரிந்து கொண்டனர் ஆதிகால ஆன்மீக ஞானிகள். இருந்தாலும் ஆன்மீகத்தின் உதவி மனித வாழ்க்கைக்கு பெரிதும் தேவைபட்டது. எனவே ஆன்மீகத்தை ஒரு வரையரைக்குள் பயன்படுத்த முற்பட்டார்கள். அந்த முயற்சிகள் அவரவர் கால சூழல் மற்றும் கலாட்சாரத்திறகு ஏற்ப அமைந்தது. அப்படி கால சூழலுக்கும் கலாட்சாரத்துக்கும் ஏற்ப வந்த கோட்பாடுகள் தான் இன்றைய பல்வேறு மதங்கள்.
கிறிஸ்துவம், இஸ்லாமியம் இந்துத்துவம், இன்னும உலகளாவிய எல்லா மதங்களும் ஆன்மீகத்தை போதிக்கிறது. ஆனால் ஆன்மீகம் என்ற பிரமாண்டமான உண்மையை அவரவர் கலாட்சாரத்க்கு எற்ப வளைத்துக்கொண்டார்கள். அதில் தான் பிரட்சனையே முளைத்தது.
பைபிள், குரான், கீதை, உபநிடதங்கள் இவையெல்லாம் ஆன்மீகம் என்ற உண்மையின் சாரம்சத்தை உவமையாக(கதையாக) சொல்லியிருக்கிறது. கதையின் கருத்து தான் உண்மை. அனால் பல மத தலைவர்களும் கருத்தை விட்டுவிட்டு கதையை பிரபலப்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான் இன்று கடவுள், சொர்க்கம், மறுபிறவி, கூடுவிட்டுகூடுபாய்தல் இதெல்லாம் நம்மால் நம்பமுடியாத ஒரு உண்மையாகி விட்டது.

(இது குறித்த விரிவான விளக்கங்கள் கட்டுரை போக்கிலேயே பார்க்கலாம்)



அறிவகம் சொல்ல வருவது என்ன?



இன்றைய மனிதகுலத்தின் அவசரத்தேவை மற்றும் அடிப்படை தேவைகளை உலகில் சாத்தியப்படுத்த வேண்டும். சமாதானமும் சமத்துவமும் தவழும் புதிய யுகம் படைக்க வேண்டும். இதை நோக்கிய ஒரு முயற்சிதான் அறிவகம்.
இந்த இலக்குக்கும் ஆன்மீகம்-அறிவியலுக்கும் என்ன சம்மந்தம்?
இன்று மனிதகுலத்துள் நிலவும் அரசியல் முதல் அத்தனை பிரட்சனைகளுக்கும் ஆன்மீகம் தான் காரணம். மதம், மொழி, இனம், நாடு, கட்சி, இத்தனை பிரிவினைகளுக்கும் அடிப்படை காரணம் ஆன்மீக அறியாமை தான். ஆன்மீகத்தை சரியா புரிந்து கொள்ளும் போது மதம், கடவுள், மரணம், சொர்க்கம், கொலை கொள்ளை, பாவம், பழி இப்படி எல்லா பிரட்சணைகளுக்கும் ஒரு சாமான்யனாலேயே தீர்வு காண முடியும். அறிவியலும் ஆன்மீகமும் சரியாக இருந்தால் அரசியலை எளிமையாக சீர்திருத்திவிட முடியும்.
மொத்தத்தில் அறிவியல், ஆன்மீகம், அரசியல் பிரட்சணைகளுக்கான காரணங்களையும் அதற்கான நிரந்தர தீர்வையும் மக்களுக்கு புரிய வைத்துவிட்டால் போதும். அறிவகத்தின் இலக்கு நிறைவேற வழி பிறந்துவிடும்.

Sunday, August 4, 2013

ஆடி அமா­வாசை பித்ரு பூஜை !

இந்து சம­யத்­த­வர்­க­ளுக்கு மிகவும் புனி­தமும் சிறப்­பா­ன­து­மான தின­மாகும். ஆடி மாதத்தில் வரு­கின்ற அமா­வாசை ஆடி அமா­வாசை விரதம் எனச் சிறப்புப் பெறு­கின்­றது. வான­வியல் கணிப்பின் படி சூரி­யனும் சந்­தி­ரனும் ஒரே இரா­சியிற் கூடு­கின்ற போதுள்ள காலம் அமா­வாசை ஆகும்.



சூரி­யனைப் “பிதிர் காரகன்” என்­கி றோம். சந்­தி­ரனை “மாதுர் காரகன்” என்­கி றோம். எனவே, சூரி­யனும் சந்­தி­ரனும் எமது பிதா மாதாக்­க­ளா­கிய வழி­படும் தெய்­வங்­க­ளாகும்.

சூரிய பகவான் ஆண்மை,ஆற்றல்,வீரம் என்­ப­வற்றை எல்லாம் எமக்குத் தர­வல்­லவர். சந்­திரன் எமது மன­துக்கு அதி­ப­தி­யா­னவர். இதனால் மகிழ்ச்சி, தெளி­வான தெளிந்த அறிவு, இன்பம், உற்­சாகம் என்­ப­வற்றை எல்லாம் தர­வல்­லவர். இத்­த­கைய பெரு­மை­களை எல்லாம் தரு­கின்ற சூரிய, சந்­தி­ரனை தந்தை, தாய் இழந்­த­வர்கள் அமா­வாசை, பூரணை தினங்­களில் வழி­பாடு செய்வர்.

தை அமா­வாசை, ஆடி அமா­வாசை இரண்­டுமே பித்­ருக்­களைப் பூஜிக்கும் முக்­கிய நாட்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. என்ன காரணம்? சூரி­யனின் வட திசைப் பய­ண­மான உத்­த­ரா­யணம் தை மாதம் ஆரம்­ப­மா­கி­றது. தென்­திசைப் பய­ண­மான தட்­சி­ணா­யனம் ஆடி மாதம் தொடங்­கு­கி­றது. அத­னால்தான், ஆடி மற்றும் தை மாத அமா­வா­சைகள் விசே­ஷ­மா­ன­தாக விளங்­கு­கின்­றன. இந்த இரண்டு தினங்­களும் பித்­ருக்­களின் ஆசியை நமக்குப் பெற்­றுத்­தரும் அரு­மை­யான தினங்கள். ஏன்? தெரிந்தோ தெரி­யா­மலோ, வாழ்வில் நம்மை அறி­யாது பல பாவங்­க­ளுக்கு நாம் உட்­ப­டு­கிறோம். பல பிற­வி­களில் செய்த பாவங்­களும் இப்­பி­ற­வியில் நம்மை நிம்­ம­தி­யின்றி தவிக்க விடு­கின்­றன. ஆழ­மாகச் சிந்­தித்தால், நமது தவ­றுகள் நமக்குப் புரியும்.

வய­தான பெற்­றோர்­களை சரி­வர பரா­ம­ரிக்­காமல் அவர்­களை முதியோர் இல்லம் அனுப்­பு­வது... நக­ரத்தின் பழக்­கங்கள் அவர்­க­ளுக்குப் பிடிக்­காது என்று கூறி, கிரா­மத்தில் பெற்­றோரை தனியே வைக்­கி­றார்கள்... பெற்­ற­வர்­களை ஷிப்ட் முறை போல அடுத்த மக­ளிடம் அல்­லது மக­னிடம் அனுப்­பு­வது... என்ன வேதனை அந்தப் பெற்­றோர்­க­ளுக்கு! பெற்­றோரை உதா­சீ­னப்­ப­டுத்­தி­விட்டு பிற­ருக்கு கல்விச் செல­வுக்கு உத­வு­கிறேன்... கோயிலில் அன்­ன­தானம் செய்­கிறேன் என்­பதால், நம் பாவம் நீங்கி புண்­ணியம் பெரு­கி­வி­டாது. இவை அனைத்தும், இப்­பி­ற­வியில் நடை­முறை வாழ்வில் தினமும் நடப்­பதை நாமே பார்க்­கிறோம். இவற்றின் விளை­வுதான்,நமக்கு ஏற்­ப­டு­கின்ற கார­ண­மில்­லாத பிரச்­னைகள்.மனக்­கஷ்­டங்கள்


இவற்­றுக்குப் பரி­கா­ரமே பித்­ருக்­களை பூஜிப்­பதும், குல­தெய்­வத்தை ஆரா­தனை செய்­வ­தும்தான் என சாஸ்­தி­ரங்கள் கூறு­கின்­றன.

குடும்­பத்தில் ஓர் ஆண் வாரிசு தோன்­றி­யதும், ஆனந்­தப்­பட்டு தன்­னு­டைய பித்ரு கட­மை­களைச் செய்து தங்­களைக் கரை­யேற்­றுவான் என எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். அதற்­கா­கவே ஏற்­பட்­டது பித்ரு தர்ப்­பண பூஜை. தேவ­லோக மூலி­கை­யான தர்ப்­பையைக் கொண்டு, எள் வைத்து ஜாதி, மத, பேத­மின்றி தர்ப்­பணம் செய்து மூதா­தை­யரை மகிழ்­விக்க வேண்­டி­யது ஒவ்­வொ­ரு­வரின் முக்­கியக் கட­மை­யாகும்.

திரு­வண்­ணா­ம­லையில் சிவ­பெ­ருமான் வல்­லாள மகா­ரா­ஜா­வுக்குத் தர்ப்­பணம் கொடுப்­பது வரு­டந்­தோறும் விழா­வா­கவே நடை­பெற்று வரு­கி­றது. குடந்­தையில் சார ங்க பாணிப் பெருமாள் தன் பக்­த­னுக்கு திதி கொடுக்­கிறார். தில­தர்ப்­ப­ண­பு­ரியில் ஜடா­யு­வுக்கு ஸ்ரீராமன் தர்ப்­ப­ண­ம­ளிக்­கிறார்.

செங்­கல்­பட்­டுக்கு அருகில் நென்­மேலி என்ற இடத்தில் உள்ள பெரு­மா­ளுக்கு ‘சிராத்த சம்­ரட்­சணப் பெருமாள்’ என்ற திரு­நாமம். தினமும் கோயில் குளக்­க­ரை யில் பெருமாள் எழுந்­த­ருளி மூதா­தை­ய­ருக்கு சிராத்தம் கொடுக்­கிறார்.

கொடு­முடி, பவானி,திருப்­புட்­குழி, ராமேஸ்­வரம், வேதா­ரண்யம், கன்­னி­யா­கு­மரி போன்ற இடங்­களில் ஆடி அமா­வாசை, தை அமா­வாசை தினங்­களில் விசேஷ பூஜைகள் நடை­பெறும். ‘கூடு­துறை’ எனப்­படும் ஆறுகள், கடல்கள் சங்­க­ம­மாகும் கரை­யோ­ரங்­களில் திர­ளாக மக்கள் கூடி அன்று பூஜை செய்­வது வழக்கம்.

முண்டம், தண்டம், பிண்டம் என்றே முறை­யாக பித்­ரு­பூஜை செய்யும் வழக்­கமும் உண்டு. முண்டம் என்­பது, அல­காபாத் திரி­வேணி சங்­க­மத்தில் பித்­ருக்­க ளைப் பூஜித்து, முடி களைந்து நீராடி அட்­சய வடத்தின் வேர்ப்­பா­கத்தைத் தரி­சிப்­பது. ‘தண்டம்’ என்­பது, காசி சென்று ‘பஞ்­ச­நதி சிராத்தம்’ செய்து, இறந்த முன்­னோர்­களைப் பூஜித்து கங்­கையில் நீராடி ஸ்ரீவி­சு­வ­நாதர், அன்­ன­பூ­ரணி, கால பைரவர் ஆகி ­யோரை தரி­சித்து தண்டம் சமர்ப்­பிப்­ப­தா கும். இங்கு அட்­சய வடத்தின் மத்­திம பாகத்தைத் தரி­சிக்க வேண்டும். அடுத்து ‘பிண்டம்’ கொடுப்­பது! கயையில் அட்­சய வடத்தின் நுனி பாகத்தைத் தரி­சித்து, பித்­ருக்­க­ளிடம் பூஜை செய்­தது திருப்தி தானா? குறை­களை மன்­னிக்­கவும் என வேண்டி, ஆல மரத்­த­டியில் நின்று வழி­பட்டு வர வேண்டும்.

இவ்­வாறு முறைப்­படி பூஜை செய்து பித்­ருக்­களைத் திருப்­தி­ப­டுத்­து­வதால் அவர்கள் நம்மை மனம் குளிர ஆசிர்வதிக்கின்றனர். அவர்கள் மனம் மகிழ்ந்து அளித்த நற் பலன்கள் அனைத்தும் சுவரில் எறிந்த பந்து போன்று நம்மிடம் திரும்பி வந்து சேரும். தெய்வத்தன்மை பொருந்திய பித்ருக்கள் கங்கை, அருகில் ஆடி அமாவாசை தினத் தன்று காத்து இருப்பது நம் ஐதீகம். சிரமம் பார்க்காமல் ஆடி அமாவாசை சென்று பித்ருக்களைக் கரைசேர்க்கும் பூஜையைச் செய்வது குடும்பத்துக்கு மிகவும் புண்ணி யம் சேர்க்கும்.

அருணா