Sunday, May 5, 2013

சிவபெருமானுக்கு வழங்கப்டும் வேறு பெயர்கள்.

திவாகரம் நிகண்டு – கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது ‘முதல் நிகண்டு’ எனப் போற்றப்படுகிறது. நிகழ்ந்ததைக் கூறுவது நிகண்டு என்று பொருள் கொள்ளலாம்.



நிகண்டு என்பது செய்யுள் வடிவில்இருக்கும் அகராதி. அதில் சிவபெருமான் பற்றி வரும் வேறு பெயர்கள்.
  1. சங்கரன்
  2. பெருமான்
  3. இறையோன்
  4. உமாபதி
  5. காமதகனன்
  6. அழலேந்தி
  7. கங்காதரன்
  8. அமலன்
  9. கறைமிடற்றண்ணல்
  10. ஆனந்தன்
  11. கூற்றையுதைத்தோன்
  12. பரசுபாணி
  13. குன்ற வில்லி
  14. சுடலையாடி
  15. ஏற்று வாகனன்
  16. மானிடமேந்தி
  17. திரியம்பகன்
  18. மறைமுதல்
  19. சோதி
  20. யோகி
  21. நக்கன்
  22. புலித்தோலுடையோன்
  23. சடையோன்
  24. புரமூன்றெரித்தோன்
  25. நாரிபாகன்
  26. பினாகபாணி
  27. முக்கட்பகவன்
  28. பேயோடாடி
  29. பசுபதி
  30. பூதநாதன்
  31. பரமன்
  32. கங்காளன்
  33. கொன்றைசூடி
  34. ஞானமூர்த்தி
  35. கொலை மழுவாளி
  36. ஈசன்
  37. ஈமத்தாடி
  38. அனாதி
  39. பிஞ்ஞகன்
  40. ஐம்முகன்
  41. பித்தன்
  42. பகவன்
  43. ஆனையுரித்தோன்
  44. ஆதி
  45. அரன்
  46. பாண்டரங்கன்
  47. சிவன்
  48. அந்திவண்ணன்
  49. உருத்திரன்
  50. ஆலமர் கடவுள்
  51. காலகாலன்
  52. நந்தி
  53. கபாலமூர்த்தி
  54. நம்பன்
  55. நீலகண்டன்
  56. நாதன்
  57. நீரணிகடவுள்
  58. தற்பரன்
  59. அரவாபரணன்
  60. கண்ணுதல்
  61. அழலாடி
  62. மூர்த்தி
  63. பிறைசூடி
  64. கயிலையாளி

No comments:

Post a Comment