Wednesday, April 24, 2013

சித்திரபுத்திரர் பிறந்த சித்ரா பவுர்ணமி !

உலக உயிர்களின் பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ப, அவர்கள் இறப்புக்கு பின் அதற்கான பலன்களை பெறுகின்றனர். அதன்படி உலக உயிர்களின் பாவ- புண்ணியங்களை கணக்கிடுவதற்காக சிவபெருமானால் படைக்கப்பட்டவர்தான் சித்திரபுத்திரன். இவர் எமதர்மனின் கணக்காளராக இருந்து அனைவரது பாவ- புண்ணியங்களையும் கணக்கிட்டு வருகிறார்.

அதற்கேற்ற வகையில் எமன், தண்டனைகளை வழங்கி வருகிறார். ஒரு முறை கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமான், உலக உயிர்கள் செய்யும் பாவ-புண்ணியங்கள் குறித்த கணக்கை எழுதுவதற்கு ஒருவரை நியமிக்க சித்தம் கொண்டார். அந்த எண்ணத்தை உடனடியாக நிறைவேற்றும் பொருட்டு, தன் அருகில் அமர்ந்திருந்த உமையாளிடம், தங்கப் பலகை ஒன்றை எடுத்து வரும்படி கூறினார்.

ஈசனின் சொல்லைக் கேட்டு மறுகணமே ஒரு தங்கப்பலகையுடன் வந்தார் உமாதேவி. அந்த பொற்பலகையில் அழகான ஒரு உருவத்தை வரைந்தார் சிவபெருமான். பின்னர் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்தில் இருந்து உயிர்ப்பெற்று வந்த காரணத்தால், அவர் சித்திர புத்திரன் என்ற பெயர்பெற்றார்.

ஒரு நாள் சித்திரபுத்திரனை அழைத்தார் சிவபெருமான். சித்திரபுத்திரா! உலகின் உன்னத தேவைக்காகவே நீ படைக்கப்பட்டுள்ளாய். மூவுலக உயிர்களின் பாவ- புண்ணியங்களை கணக்கிடவே உன்னை உருவாக்கினேன். அதற்கான நேரம் கனிந்து வருகிறது. தேவலோக அதிபதியான தேவேந்திரன் பிள்ளை வரம் வேண்டி, தனது மனைவியுடன் என்னை நோக்கி கடும்தவம் இருந்து வருகிறான்.

இந்திரனின் மாளிகையில் காராம் பசு உருவத்தில் காமதேனு வாழ்ந்து வருகிறது. நீ அதனுடைய வயிற்றில் மூன்றே முக்கால் நாழிகை மட்டுமே தங்கியிருந்து குழந்தையாகப் பிறந்து வளர்ந்து வா!. பெரியவன் ஆனதும் கையிலாயம் வந்து உலக உயிர்களின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதி வா! என்று கூறினார்.

சிவபெருமானின் ஆணைப்படி காமதேனுவின் வயிற்றில் மூன்றே முக்கால் நாழிகை நேரம் மட்டுமே தங்கியிருந்து பிறந்தார் சித்திரபுத்திரன். அவர் பிறந்தபோது கைகளில் ஏடும், எழுத்தாணியும் வைத்திருந்தார். தேவேந்திரனும், அவன் மனைவி இந்திராணியும் குழந்தையைக் கண்டு அகமகிழ்ந்தனர். சித்திரபுத்திரர் பிறந்த தினம் சித்ராபவுர்ணமியாகும்.

பெரியவன் ஆனதும் சித்திரபுத்திரனுக்கு, சிவபெருமானின் உத்தரவு நினைவுக்கு வந்தது. அவர் தன் படைப்புக்கான காரணத்தை தேவேந்திரனிடமும், இந்திராணியிடமும் தெரிவித்து, பின்னர் கயிலாயம் சென்று சிவபெருமானை வணங்கி நின்றார்.

அதன் பிறகு, உலக உயிர்களின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதும் பணியை தொடங்கினார். அன்று முதல் தனது பணியை செவ்வனே செய்து வரும் சித்திரபுத்திரர், எமதர்மனின் கணக்கராக இருந்து வருகிறார்.

விரத முறை............. சித்ரா பவுர்ணமி தினத்தில் காலையில் எழுந்து நீராட வேண்டும். பின்னர் பூஜை அறையில் கோலமிட்டு, கும்பம் வைத்து வணங்க வேண்டும். அந்த கும்பத்தில் சித்திரபுத்திரர் எழுந்தருள்வார் என்பது ஐதீகம். சித்திரபுத்திரரின் படம் வைத்திருப்பவர்கள் அவரது படத்தை வைத்து வணங்கலாம்.

சித்திரபுத்திரர் காராம் பசுவின் வயிற்றில் பிறந்தார் என்பதால், அன்றைய தினம் பசுவில் இருந்து கிடைக்கும் எந்த பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்படுகிறது. வழிபாட்டின் போது வைக்கப்படும் நைவேத்தியப் பொருட்களில் உப்பு சேர்க்கக்கூடாது. அன்னம், இளநீர், கொழுக்கட்டை போன்றவற்றை படைத்து வழிபடலாம்.

மேலும் வீட்டில் உள்ள பசுவை குளிப்பாட்டி, மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து தீபாராதனை காட்ட வேண்டும். அத்துடன் பூஜையில் வைத்த நைவேத்தியத்தையும் பசுவிற்கு கொடுக்கலாம். தொடர்ந்து கோவில்கள் அல்லது வீட்டில் சித்திரபுத்திரரின் கதையை ஒருவர் படிக்க, மற்றவர்கள் கேட்பது நல்லபலனை கொடுக்கும்.

சித்ரா பவுர்ணமியானது சனி, ஞாயிறு, வியாழன் ஆகிய தினங்களில் வருவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் சித்ரா பவுர்ணமி வியாழக்கிழமை வருகிறது. சித்ரா பவுர்ணமியில் சித்திர புத்திரரை வணங்குவதால், தோஷ நிவர்த்தி, மாங்கல்ய பலம், நீண்ட ஆயுள் போன்றபலன்கள் கிடைக்கும்.

Friday, April 19, 2013

எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது என்பதை அறியுங்கள்!

கடவுள் ஒருவனே , என்கிறது பிற மதங்கள். ஆனால், இந்து மதத்தில் மட்டும் எதற்கு இத்தனை கடவுள்கள் , என்கிற கேள்வி நம் எல்லோர் மனத்திலும் நிகழும். மும் மூர்த்திகள் என்று கருதப்படுபவர்கள் கூட , ஒரு யோக நிலையில் இருப்பது போல நாம் எத்தனை படங்களில் பார்த்து இருக்கிறோம். அவர் யாரை எண்ணி தவம் செய்கிறார். மும்மூர்த்திகளுடன் .

சதாசிவம், ருத்ரன், என்று – ஐந்து மூர்த்திகள் இருக்கின்றனராம்.


உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய அந்த கடவுள் ஒன்று தான். அவரைத்தான் சிவனும் , யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே. மீதி நாம் வணங்கும் அனைவரும், தேவதைகள் , தெய்வங்கள் – அவதாரங்கள் , ஒரு சில காரண , காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள். சித்தர்களுக்கு மேல் இருக்கும் உயர்ந்த நிலை , இந்த தெய்வங்கள்.


முருகனும், விநாயகரும் கூட – சித்தர்கள் போன்று வாழ்க்கை நடத்தி, பின் சிவனின் மைந்தனானவர்கள் என்கின்றனர். பலப்பல யுகங்கள் கடந்து , நாமும் இறைநிலை அடைய விருக்கிறோம். அதை இன்றிலிருந்தே தொடங்குவது , நமக்கு இன்னும் நல்லது.


எப்படி இறைவனுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றனவோ, அதே போல மனிதர்களுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒரு பெரிய தொழிற்சாலை இருப்பதாக எடுத்துக்கொள்வோம். நாமெல்லாம் தொழிலாளர்கள். நம்மை சூப்பர்வைஸ்  செய்ய – நவ கிரகங்கள். நவ கிரகங்கள் – பக்காவாக நம்மை கண்காணித்து , நம்மை வேலை வாங்குகின்றன. பஞ்ச பூதங்களை – ராமெட்டீரியலாக கொண்டு , பஞ்ச பூத கலவையாலான அந்த உடலைக் கொண்டு இந்த பிரபஞ்ச தொழிற்சாலை இயங்குகிறது.


இந்த சூபர்வைசர்களுக்கு  மேலே மேலாளர்கள். அவர்களுக்கும் மேலே – பொது மேலாளர்கள் . அவர்களையும் இயக்குவது இயக்குனர்கள். அந்த இயக்குனர்களுக்கும் மேலே – சேர்மன் என்கிற முதலாளி.

செய்யும் வேலை , திறமை , அவர்கள் செய்து முடிக்கும் திறன் , என்று ஒவ்வொருவரின் உழைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உழைக்க வேண்டும். அதாவது , வாழ வேண்டும் – வாழ்ந்து அவரவர் கடமையை செய்ய வேண்டும். இப்படியே , ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த நிலை தீர்மானிக்கப் படுகிறது. ஒரு செக்சனிலிருந்து  , மற்றொரு  பிரிவுக்கு அவர் மாற்றப்படுவர்.  நல்ல திறமையுடன், நல்லவராக இருந்தவருக்கு – அடுத்த பிரிவு , கொஞ்சம் மேன்மையானது

இந்த அப்ரைசல் தான் – மரணம்  , அடுத்த பிறவி. நீங்கள் திரும்ப உழைப்பதற்கு வசதியாக , திரும்ப இளமை கிடைக்கிறது. மோசமான வேலை செய்தவர்களுக்கு – கடினமான செக்க்ஷனும் கிடைக்கும்.
நீங்களே ஒண்டியா, தனித்தனியே வேலை செய்ய முடியாததால் – உங்களுடன் இணைந்து செயலாற்ற உங்கள் குடும்பம் , நண்பர்கள் , சமுதாயம் என்று ஒரு குழுவே இருக்கிறது.

குடும்பத்தில் யாரோ ஒருவர் , ஓவராக ஆட்டம் போட்டாலும், திடு திப் பென்று ( அகால மரணம்) டிபார்ட்மென்ட் மாற்றமும் நிகழும். இதனால் , அவரும் பாதிக்கப் படுகிறார். அந்த குடும்பமும் வேலைப் பளுவால் முழி பிதுங்கும்.
இவை அத்தனையும் சமாளித்து , நரை மூப்பெய்தி – என்னை கூட்டிக்கோப்பா என்று  , நீங்கள் எழுப்பும் ஒரு மன ஓலம் , உங்களுக்கு அடுத்த கதவை திறக்க வைக்கும்.

நீங்கள் கதவு திறந்து , அடுத்த அறைக்கு வந்ததும், அதே சூப்பர்வைசர்கள். அவர்களுக்கு தெரியும், நம்மோட அருகதை. இதில், பாரபட்சம் பார்க்காது – நமக்கு கிடைக்க வேண்டிய கூலியை , அவர்கள் மேலிடத்திலிருந்து நமக்கு கிடைக்க செய்கின்றனர்.

ஒரு ப்ரோமோஷன் கொடுக்கும் முன், உங்கள் சகல திறமையும் பரிசோதிப்பது போல – உங்களுக்கு பலப்பல கஷ்டங்கள், சோதனைகள் வைக்கப்படுகின்றன. இதிலும் தாக்குப் பிடித்து , உங்கள் அணியிலுள்ள சக தொழிலாளர்களையும் அரவணைத்து , உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்க வேண்டும்.

உங்கள் அணியிலும், சமூகத்திலும் , ஒருவர் மனம் கூட கோணாது , அவர்களுக்கும் ஒத்தாசை செய்து , ஒரு குழுவாக கூடி – உங்கள் கடமையை செய்து முடிக்கவேண்டும். அவர்களை பகைத்துக் கொண்டால், சமயத்தில் சொதப்பிவிடுவார்களே.

உங்களை நீங்கள் , உங்கள் ஆன்ம ஒளியை உணர்ந்து கொள்ளுதல் தான் – முதல் படி. உங்கள் பலம் என்ன வென்று அதன் பிறகுதானே உணர முடியும்?  ஹனுமனை போல நீங்களும் கடலை தாண்ட முடியும். மலையையும் தூக்க முடியும்.

உலகம் ஒரு நாடக மேடைதான். அந்த இறைவன் இயக்குகிறான். திறமையாக , நடித்தால் – நீங்களும் ஒரு நாள் ஹீரோ வைக்கலாம். இல்லையெனில், சாதாரண துணை நடிகர் தான். ஒரு நாடகம் முடிந்ததும் , அடுத்த நாடகம் ஆரம்பிக்கும். அப்போது ஹீரோவும், இரண்டாம் நிலைக்கு தள்ளப்படலாம், தனது பொறுப்பை உணர்ந்து ஜொலிக்காவிடில்.
..நமது பிறப்பின் நோக்கம் என்ன, நாம் எந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் என்பது மிக முக்கியம்.

இப்போது நாம் எங்கு இருக்கிறோம் ? நமக்கு ஏன் இத்தனை தெய்வங்கள் என்று புரிகிறதா?  எப்படி சூரியனிலிருந்து – தெறித்து வந்த , உஷ்ணத் துளிதான் பூமி என்று விஞ்ஞானம் நிரூபித்ததோ, அதைப் போல ஏராளமான சூரியன்களும் இருப்பது உண்மையோ, அந்த பிரபஞ்சத்திற்கும் மூலப் பொருள் ஒன்று இருக்கும். அந்த மூலத்திலிருந்து வெளியான , துகள்களின் , அணுக்களில் , அணுக்களில் உள்ள அணுதான் , நாம் அனைவரும்.
என்னில் உள்ள அந்த ஜீவ ஒளி தான் , உங்களிலும் உள்ளது. நம் அனைத்து உயிர்களிலும் உள்ளது. இயற்கையிலும் உள்ளது.

எனவே , ஜாதி மத . இன துவேஷத்தை மறப்போம். சக மனிதர்களை நேசிப்போம். இயற்கையை ஆராதிப்போம். நம் வாழ்வாதாரத்தை வணங்குவோம். குழந்தைகளையும், திறமை இல்லாதவர்களையும், வழி நடத்துவோம். நாம் அனைவரும் கடவுளாவோம்.

அடி மனத்தில் பரவும் எண்ணம், எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறையாது. முதலில் நம் மனம் முழுவதும் நல் எண்ணங்களால் நிறையட்டும்.
பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம். பிற உயிர்களை கொன்று புசிக்க வேண்டாம். நடந்தவை மறப்போம். இனியும் மனதறிந்து எந்த பாவமும் செய்யாமல் , நிம்மதியாக வாழ்வோம்.

தோல்விகளை கண்டு துவளாத மனமும், வெற்றிகளைக் கண்டு மமதை கொள்ளாத மனப் பக்குவமும், கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனப்    பக்குவமும், வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் !
கீழே , சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் – சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். முயன்று பாருங்கள்…    மனிதம் வளர்ப்போம் !

காரியம் நடக்க!

  • விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்

  • செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்

  • நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி

  • வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
  • ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
  • மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
  • கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
  • திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
  • மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
  • புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
  • தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி
  • புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி
  • விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
  • உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
  • வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்
  • சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
  • பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்
  • பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
  •  அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
  • நோய் தீர
  • முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
  • கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
  • காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்
  • ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு
  • மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை
  • அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
  • நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
  • பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
  • மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
  • வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்
  • பித்தம்- முருகன்
  • வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
  • எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்
  • ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்
  • குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்
  • அம்மை நோய்கள்- மாரியம்மன்
  • தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
  • புற்று நோய்- சிவபெருமான்
  • ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு

உங்கள் வீட்டு பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் என்பது தெரியுமா?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.



ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.

ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.
பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்த ளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.

தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
முக்கியமாக கவனிக்க வேண்டிய து, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன் றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.

சில வீடுகளில் இடப் பற்றாக்குறை கார ணமாக படுக்கை அறை அல்லது சமை யல் அறை சுவர்களில் உள்ள அல மாரிக ளை பூஜை அறையாக பயன் படுத்துவது ண்டு. அப்படி இருந்தால் வழி படும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப் பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழி படுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக் கலாம்.

கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டி ப்பாக தவிர்க்க வேண்டும்.
பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும்.

ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.
பூஜை அறையில் மந்திர உச்சாடனங் களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண் ணங்களை கொண்டு வரும்.

அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

நம்பினார் கெடுவதில்லை!

களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.


இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார்.


இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.
இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.


மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.
“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.
பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?
அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…


“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.
அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.


அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.


அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.
மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.


அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.
அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.


குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.