நாளை (வெள்ளிக்கிழமை) கார்த்திகை மாதம் பிறக்கிறது. நாளை அய்யப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருக்க மாலை அணிய உள்ளனர். இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரண கோஷம் கேட்டபடி இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக மாலை அணிந்து சபரிமலை அய்யப்பனை தேடிச்சென்று அருள் பெற்று திரும்பும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது.
சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்குவதால் பக்தர்களின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிடும். சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷத்தில் மூழ்கி இருப்பார்கள். சபரிமலை அய்யப்பன் பற்றியும், 48 நாள் விரதம் மற்றும் பலன்கள் பற்றியும் பக்தர்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்…..
சபரிமலை யாத்திரை – விரத முறைகள் சபரிமலை யாத்திரை பொழுது போக்கிற்காகவும், கண்டு களிப்பதற்காகச் சென்று வரும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு ஐயப்பன்மார்களும் உணர வேண்டும். மாலை போட்டுக் கொள்ளும் ஐயப்பன்மார்கள் தாங்களாக விரும்பி வந்து விரதத்தை மேற்கொள்ளுகிறார்கள்.
யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இதை மேற்கொள்ளுவதில்லை. ஆதலால் ஐயப்பன்மார்கள் விரதத்திற்கு பங்கும் ஏற்படா வண்ணம், இவ்விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக மாலை அணிவிக்கும் குருசாமி இதில் கவனமாகவும், கண்டிப்பாகவும் இருக்க வேண்டும்.
இப்பூவுலகிலேயே பக்தி உணர்ச்சி தழைத் தோங்கி தூய உள்ளத்துடன், உலக மாயை அகற்றி, உள்ளம் தெளிவாக்கி பற்றற்ற பரந்த மனப்பான்மையோடு பக்தர் வெள்ளம் பயபக்தியுடனும், பரவசத்துடனும் பயணம் தொடர்கின்ற புனித யாத்திரை சபரியாத்திரை என்பதனை உலகறியும்.
பல்லாண்டுகளாகப் பெரியோர் பலரால் போற்றி காப்பாற்றப்பட்டு வரும் பயண, விரத விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் இக்காலத்தில் சபரி யாத்திரை செல்லும் இளம் தலைமுறையினர் உறுதியுடனும், உள்ளத்தெளிவுடனும், ஒழுங்குடன் பின்பற்றி சபரி யாத்திரையின் புனிதத் தன்மையை மாசின்றி நிலை நிறுத்த வேண்டியது கடமையாகும்.
1. பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலை அணிவது சாலச் சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியது இல்லை. குறைந்தபட்சம் ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையைத் துவங்க வேண்டும்.
2. துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்ப திருஉருவப் பதக்கம் ஒன்றினை இணைத்து பலமுறை முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதையில் சென்று வந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரை குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் தம் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.
மாலை அணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து அடிவணங்கி ஆசி பெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நேரத்திலிருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர் தம் மொழிகளை தேவவாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன், பணிந்து நடந்து யாத்திரையை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
3. நீலம், கருப்பு காவி இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் அணிய இயலாவிட்டாலும் பஜனையில் கலந்து கொள்ளும் போதும் யாத்திரையின் போதும் முழுவதும் கண்டிப்பாக வண்ண ஆடைகளை அணிவது அவசியம்.
4. காலை, மாலை இரு வேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருஉருவ படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்து கொண்டு வாய் விட்டுக் கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தல் பேரின்பம் நல்குவதாகும்.
5. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதைïட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவைகளை தவிர்க்க வேண்டும். படுக்கை தலையணைகளை நீக்கி தன் சிறுதுண்டை மட்டும் தரையில் விரித்து துயில வேண்டும். காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
6. பிரம்மச்சாரிய விரதத்தை ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடித்து தலையாய விரதமாகும். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும். மது, மாமிசம், லாகிரி வஸ்துக்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும்.
7. மற்ற ஐயப்பன்மார்களிடம் பேசும்போது, “சாமி சரணம்” என்ற தொடங்கிய பின் விடைபெறும்போது “சாமி சரணம்” எனச் சொல்ல வேண்டும்.
8. விரத காலத்தில் அசைவ உணவு உண்ணுவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த சைவ உணவையே உண்ண வேண்டும். மாலை தரித்த வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் உணவு உண்ணக்கூடாது.
9. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை “ஐயப்பா” என்றும் பெண்களை ”மாளிகைபுறம்” என்றும் சிறுவர்களை “மணிகண்டன்” என்றும் சிறுமிகளைக் “கொச்சி” என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.
10. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக யாத்திரை செல்லும் பக்தர்களிடம் “நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன், என்னோடு தைரியமாக வரலாம் என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும்போது “போய் வருகிறேன்” என்று யாரிடம் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து, அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்து புறப்பட வேண்டும்.
11. மாலை அணிந்த பிறகு குடும்பத்தில் நெருங்கியவர் எவரேனும் காலமாகி, அதன் காரணமாக துக்கத் தீட்டு ஏற்படுமானால் அந்த வருடம் யாத்திரை செல்லக்கூடாது. சவரம் செய்தல் கூடாது, துக்கக் காரியங்களில் கலந்து கொள்ளவோ, பெண்களின் ருது மங்களச் சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ, திருமணங்களுக்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது. மாத விலக்கானப் பெண்களைக் காணக்கூடாது. அப்படி தெரியாது காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வணங்குதல் வேண்டும்.
12. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ருது காலம் அடையாத சிறுமிகள், ருது காலம் நின்ற வயதான பெண்களும் சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளலாம். இதனை எல்லா குருசாமிகளும் கவனத்தில் மேற்கொள்வது அவசியம்.
13. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு “கன்னி பூஜை” நடத்த வேண்டும். சற்றே விரிவான முறையில் பஜனை, கூட்டு வழிபாடுகள் ஆகியவைகள் நடத்தி ஐயப்ப பக்தர்களுக்கும், மற்றவர்களுக்கும் பிரசாதம் அளித்து அன்னதானம் செய்ய வேண்டும்.
14. முதன் முறையாக யாத்திரையை மேற்கொள்ளும் ஐயப்பன்மாரைக் “கன்னி ஐயப்பன்” என்றும் அதன் பிறகு மலையாத்திரை செய்யும் ஐயப்பன்மார்களை “பழமக்காரர்கள்” என்றும் அழைக்கப்படுவார்கள்.
15. இருமுடி கட்டு பூஜையை தன் வீட்டிலோ, குருசாமி வீட்டிலோ கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும். வீட்டை விட்டு கிளம்பும் முன்பு விடலைக்காய் ஒன்றை வீட்டின் முன் அடித்து விட்டு “சுவாமியே சரணம் ஐயப்பா” என்று சரணம் விளித்து புறப்பட வேண்டும்.
16. கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்ட தகதியிலிருந்து ஐயப்பன் சன்னதிதானம் செல்லும் வரை அவர்களால் இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றி வைக்கவோ கூடாது. குருநாதர் அல்லது பழமலை ஐயப்பன்மார்களைக் கொண்டுதான் ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.
17. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்குமாதலால் பக்தர்கள் கூட்டமாக சரணம் கூறிக் கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் கூறுதல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.
பம்பை நதியில் நீராடும்போது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக் கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழி வகுக்க வேண்டும். பம்பையில் சக்தி பூஜையின் போது ஐயப்பன்மார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப் பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப் பெறுவதுதான் சபரிமலை பஸ்மம். இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
18. ஐயப்பன்மார்கள் எல்லோரும் குறிப்பாக, கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன்விளைவிக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில் கடமை சூழ்நிலை கருதி எரிமேலியில் இருந்து சாலக்காயம் வழியாகவும் சபரிமலை செல்கிறார்கள் என்றாலும் மேற்குறிப்பிட்ட பெரியபாதையில் செல்லும்போது மலைகளில் விளையும் பல மூலிகைகள் கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும், எழில் மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பதாலும், உள்ளம் பூரிப்பதாலும் பேரின்பமும் பெரு நலமும் அடைகின்றோம்.
நீண்ட வழிப் பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் கூறுவதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்த பக்தி உணர்ச்சியை வளர்க்கின்றது. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி வாயிற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து வீட்டிற்குள் நுழைய வேண்டும்.
வழிபாட்டு அறையில் கற்பூர ஆரத்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும். யாத்திரை நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருஉருவப் படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
Thursday, November 15, 2012
கந்தசஷ்டி விரதம் இருப்பது எப்படி????
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார்
என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
வேண்டுவனயாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?
கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.
(இந்த வருடம் 13.11.2012 முதல் 18.11.2012 வரை.) சூரசம்ஹார தினத்தன்று (18.11.2012) அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.
அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.
பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள்.
அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.
அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

Sunday, November 11, 2012
வாழ்வில் இருளை அகற்றி ஒளியேற்றும் தீபாவளி திருநாள்!
இந்துக்களின் பண்டிகைத் திருநாளாக தீபாவளியை கொண்டாடுகிறோம். ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா நரகாசுரன் எனும் அரக்கன் உயிர்களுக்கு கேடு விளைவித்ததால் அவனை அழித்து உயிர்களை துன்பத்திலிருந்து மீள அருள் செய்தார்.
தீமைகள் விலக நன்மைகள் புரிந்து இருள் அகற்றி எங்கும் ஒளி பெறச் செய்த நன்னாளில், மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் எமக்கு எப்பொழுதும் கிடைக்கவேண்டும் என்றே அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
புராணங்கள் கூறுவதும் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த வழிமுறைகள் படியும் பார்த்தால் கொடுமையான அரக்கன் ஒருவனால் அல்லல் உற்றவர்களுக்கு கிருஷ்ண பகவான் திருவருளால் விடுதலை கிடைத்த மாபெரும் தினம் இத்தீபாவளித்திருநாள். அரக்கன் அழிந்தான். கொடுமை இருள் அறியாமை மறைந்தது. ஒளியாமை பிறந்தது. ஆம் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. மானிட வாழ்வில் அரக்க குணத்தை விட்டொழித்து நற்குணங்களை தம்மனதில் நிலை நிறுத்தி அறிவு பரப்பிட குறைவில்லாது நிறைவுடன் வாழத்தொடங்கினர். இல்லாதவர்க்கு இருப்பதைக்கொடுத்து சிறப்புடன் வாழ அறிவுக் கண்களை திறந்து ஒளி பெறச்செய்தனர். இப்படி அன்று இந்நாளில் கொண்டாடியதை இன்றும் அது வழமையாய் தீபாவளிப் பண்டிகை அதாவது ஐப்பசி மாதத்தில் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி திதி அன்று கொண்டாப்படுகிறது.
நரக சதுர்த்தசி அன்று நரகாசுரன் அழிந்ததால் மக்கள் துன்ப இருள் நிங்கியது என ஒளி தீபம் ஏற்றி இல்லங்கள் எங்கும் ஒளி ஏற்றினர். வெற்றி விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். அக அழுக்கு, புற அழுக்கு எல்லாம் போக்கி எண்ணெய் தேய்த்து, அதிகாலையில் நீராடி புத்தாடை அணிவர். பின் கவலை மறந்து ஆடிப்பாடி உறவினர்கள் அனைவருடனும் திண்பண்டங்கள், பழங்கள், என விருந்து உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தனர். துன்பம் போக்கிய அந்த கிருஷ்ணபகவானை வாழ்த்தி துதி செய்து மகாலஷ்மியை நிணைந்து அழகுகோலம் இட்டு, வீட்டை அழகு படுத்தி விளக்கேற்றி லஷ்மி பூஜை செய்து வழிபாடாற்றினர். "தம ஸோ மா ஜ் யோதிர் கமய" அதாவது இருளில் இருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல் என்ற வேண்டுதல் உணர்வோடு விளக்கேற்றுவது; கோலம் இட்டு மாவிலை தோரணம் கட்டி பூமாலைகள் தொங்க விட்டு வீட்டை நேர்த்தியாக அழகுபடுத்துவது. இப்படி நமது காலாச்சாரத்தை வளர்த்து இறை உணர்வினை ஊட்டி
ஒற்றுமை மேலோங்கிடச் செய்தனர்.
நமது புராணங்களில் இத் தீபாவளித் திருநாளுக்கு பலவிதமான கதைகள் கூறப்படுகிறது. விஸ்ணு புராணமும் ஸ்ரீமத்பாகவதமும் ஒரேமாதிரியாக குறிப்பிட்டுச் சொல்கின்றன. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தபோது "ப்ருகு" முனிவரின் மகளாகிய ஸ்ரீலட்சுமி பதினான்கு இரத்தினங்களில் ஒன்றாக கொண்டாள். அவள் வடிவம் 'தூயஸ்படிகமணி' போன்ற பேரெழில் கொண்டு கையில் தாமரை மலருடனும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் அமர்ந்திருந்தபடி ஆழ்கடலில் இருந்து வெளிப்பட்டாள். அவளை அபிஷேகித்து ஆராதித்து தேவர்களனைவரும் மகாவிஸ்னுவுக்கு அர்ப்பணித்தனர். அவரும் அவளுக்கு தனது இதயத்தில் இடமளித்து மார்பில் அமர்த்திக் கொண்டார்.
செளகந்தர்ய புராணத்தில் கூறப்பட்ட விதம் வேறு. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து பெறப்பட்ட இரத்தினங்களும் இதர பொருட்களும் சரிவர பிரிக்கப் படாததால் அசுரர்கள் அரசன் 'பலிக்கு' மனக்குறை. அதனால் இரத்தினங்களில் மகாலட்சுமியை அங்கிருந்து அபகரித்து ஒரு இருட்சிறையில் அடைத்து வைத்து விட்டான். அதோடு மட்டுமல்லாது தேவர்களை துன்புறுத்தியும் வந்தான். தேவர்கள் சிவன், பிரம்மா இருவரிடமும் சென்று இதற்கு என்னவழி எனக்கேட்க அவர்கள் விஷ்ணுவிடம் முறையிடுமாறு கூறியதைக் கேட்டு, விஷ்ணுவிடம் குறை களைந்து லட்சுமியை மீட்குமாறும் அவளை ஏற்றுக்கொள்ளவும் வேண்டி நின்றனர்.
பலிமன்னன் தான தர்மர்மங்கள் செய்வதோடு மட்டுமல்லாது மிருத்யுஞ்ச வரமும் பெற்றிருந்தான். அதனைக் கருத்தில் கொண்ட மகாவிஷ்ணு வாமன உருவம் தாங்கிப் (குள்ள உருவம்) பலி மன்னனிடம் சென்றார். அங்கு அவன் பித்ரு பூஜை செய்யும் சமயத்தில் மூன்றடி மண் நிலத்தை தானமாகப் பெற்று அதை தந்திரமாகக் கையாண்டார். ஓரடி பூலோகத்தையும், ஈரடி பதினான்குலோகங்களையும், மூன்றாவது அடி அவன் தலையிலும் கால் வைத்து அவனை அழித்து இலட்சுமியை மீட்டார். பலி மன்னனும் லட்சுமி என்றும் பூமியில் இருக்குமாறு விஷ்ணுவிடம் வேண்டினான். அதற்கு விஷ்ணுவும் முற்றிலும் இங்கு இருந்திட முடியாது என்று கூறிவிட்டு யார் வீட்டில் ஜப்பசி மாதக் கிருஷ்ணபட்சத் திரயோதசி முதல் அமாவாசை வரை தீபங்கள் ஏற்றி அலங்கரித்து லட்சுமி பூஜை நடத்தப்படுகிறதோ அவர் வீட்டில் அந்த வருடம் முழுவதும் ஸ்ரீலட்சுமி வந்து தங்கி வாசம் செய்வாள் என்றார். அதன்படித் தான் தீபாவளியன்று நாம் தீபங்களை ஏற்றி எங்கும் மங்கலம் பொங்க மகிழ்வுடன் காத்தல் கடவுள் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வணங்குகிறோம்.
தீபாவளியின் பொருள் தீபம்+ ஆவளி அதாவது தீபங்களின் வரிசை ஆகவே தீபாவளித் தினத்தில் நமது கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெறும் தீபங்கள் ஏற்றி வழிபடுவது ஆகும். இத்தீபத் திருநாளில் வரிசையாக நேர்த்தியாக கோலங்கள் அழகுடன் மாவினால் வரைந்து நிறமூட்டி தீபங்களை ஏற்றி அதன்மேல் அழகு படுத்தி வைத்து மகிழ்வுடன் கொண்டாடுவோம். தீபத்திலிருந்து வெளிப்படும் ஒளி இருளைப்போக்குவது போல் எமது உயிரோட்டத்தின் அடையாளமாக விளங்கும் ஒளிர்கின்ற தீபங்களை நாம் துதிப்பது நமது உள்ளொளியைப் பெருக்கி அக இருளைப்போக்க வல்லது என்பது நமது நம்பிக்கை. ஒளிரும் ஜோதி நிரந்தர முன்னேற்றம் தரவல்லது. ஆகவே இன்நாளில் நீராடி திருநீறு பூசி புத்தாடை அணிந்து ஆலயம் சென்று வழிபாடாற்றி பெரியோரை வணங்கி ஆசி பெற்று ஒழுக்க நெறிகளோடு வாழ அறிவுக்கண்களை திறந்து நல்லொளி பரப்பி நன்மைகளை நினைத்து நல்லதை செய்வோம். அன்போடும் பண்போடும் வாழ்வோம். தமிழர் வாழ்வில் இருள் அகன்று ஒளி வீச தீபாவளியை கொண்டாடுவோம்.

Subscribe to:
Posts (Atom)